கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

0
47
Temporary closure of Coimbatore court!! Forest department notification!!
Temporary closure of Coimbatore court!! Forest department notification!!

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக அதிக கன மழை பெய்ந்து வருகின்றது.இதில் பூண்டி,வெள்ளியங்கிரி,குற்றாலம் போன்ற பகுதிகளில் கடந்த செவ்வாய்கிழமை முதல் மழை பெய்து வருகின்றது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் ஆபாயம் உள்ளது.புதன்கிழமை காலை பெய்த இந்த கன மழையால் நீர் வரத்து அதிகமாகி வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமானதால்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்படுவதுடன் அதனை தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் எந்த உயிர் சேதமும் ஏற்படாது  என்று வனத்துறை தெரிவித்துள்ளது.நீர் வரத்து இயல்பான நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக கனமழை பெய்ந்ததால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி நீர் பகுதி ,நொய்யல் ஆறு போன்ற பகுதிகளில் உள்ள குட்டைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது.

author avatar
Parthipan K