ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால்.. சிறுநீரகத்தில் உள்ள ஒட்டுமொத்த கற்களையும் கரைத்து விடலாம்!!

Photo of author

By Divya

இன்று ஆரோக்கியமற்ற வாழ்க்கை மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.

தற்போதைய காலத்தில் 30 வயதை கடந்த பலர் சிறுநீரக கல் பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சிறுநீரகத்தில் உப்பு அதிகம் சேர்ந்துவிட்டால் அவை நாளடைவில் கற்களாக மாறிவிடுகிறது.

சிறுநீரக கற்கள் யாருக்கு ஏற்படும்?

*உடல் பருமன் கொண்டவர்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படக் கூடும்.

*ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிறுநீரக கற்கள் உருவாகக் கூடும்.

*உடலுக்கு போதிய நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.

*சிறுநீரை அடக்கி வைப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகக் கூடும்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:

*துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியேறுதல்
*நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுதல்
*அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுதல்
*அடிக்கடி வயிறு வலி ஏற்படுதல்

சிறுநீரக கற்களை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்துவது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)புதினா
3)துளசி
4)வெள்ளரிக்காய்

செய்முறை:-

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை தனியாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு 10 புதினா இலை மற்றும் 10 துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு துண்டு வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் சுத்தம் செய்த புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கண்ணாடி பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்த வெள்ளரிக்காய்,துளசி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து விடவும்.அதன் பிறகு எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் தேங்கிய கற்கள் கரைந்துவிடும்.தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இந்த பானத்தை அருந்தி வந்தால் சிறுநீரக கற்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும்.