தூக்கி வீசும் வெங்காயத் தோல் இருந்தால்.. தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்!!

Photo of author

By Divya

தூக்கி வீசும் வெங்காயத் தோல் இருந்தால்.. தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்!!

Divya

நீங்கள் ரொம்ப நாட்களாவே தூக்கமின்மை பிரச்சனையை சந்தித்து வருகிறீர்களா? இந்த தூக்கமின்மை பிரச்சனையை துரத்தி அடிக்கும் வீட்டு வைத்தியம் இங்கு தரப்பட்டுள்ளது.இன்று இரவு இதை முயற்சித்தால் நிச்சயம் நல்ல தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய வெங்காயத் தோல் – ஒன்று
2)பூண்டு தோல் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அதேபோல் ஒரு முழு பூண்டை எடுத்து அதன் மேல் தோலை மட்டும் உரித்த எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு ஒரு கிண்ணத்தில் வெங்காயத் தோல் மற்றும் பூண்டு தோல் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

ஸ்டெப் 05:

தண்ணீர் சூடானதும் வெங்காயத் தோல் மற்றும் பூண்டு தோலை அதில் போட்டு குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 06:

பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 07:

இறுதியாக இனிப்பு சுவை சேர்க்க விரும்புவர்கள் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி பருகலாம்.இந்த பானத்தை இரவு நேரத்தில் உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருகலாம்.அல்லது மாலை நேரத்தில் டீக்கு பதில் இந்த வெங்காய பூண்டு தோல் பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)ஜாதிக்காய் – ஒன்று
3)ஏலக்காய் – ஒன்று
4)பசும்பால் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு மிக்சர் ஜார் எடுத்து கசகசா,ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வரும் சமயத்தில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து குறைவான தீயில் காய்ச்ச வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் நல்ல தூக்கம் வரும்.