வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு எலி நடமாட்டம் கூட இருக்காது.
தேவையான பொருட்கள்:
1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி
2)கடலை மாவு – மூன்று தேக்கரண்டி
3)சலவைத் தூள் – ஒரு தேக்கரண்டி
4)பச்சை மிளகாய் – நான்கு
5)தண்ணீர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
ஸ்டெப் 01:
ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு அதில் மூன்று தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து ஸ்பூன் கொண்டு கலந்து விட வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து அதில் சலவைத் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.துணி ஊறவைக்க பயன்படுத்தும் வாஷிங் பவுடரை தான் சலவைத் தூள் என்கிறோம்.
ஸ்டெப் 04:
பிறகு நான்கு பச்சை மிளகாயை காம்பு நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கோதுமை மாவு கலவையில் போட்டு கலந்து விட வேண்டும்.
ஸ்டெப் 05:
இறுதியாக அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்துவிடவும்.
இவ்வாறு செய்தால் எலிகள் அந்த உருண்டைகளை சாப்பிட்டு வயிறு வீங்கி இறந்துவிடும்.வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் மேல சொல்லப்பட்டுள்ள பொருட்களின் அளவை கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் இந்த உருண்டையை வைத்து வந்தால் எலி நடமாட்டத்தை அடியோடு ஒழித்துவிடலாம்.
அதேபோல் கோதுமை மாவில் சிறிது மிளகாய் தூள் மற்றும் வாஷிங் பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிணைந்து வீட்டின் மூலை முடுக்கில் வைத்தால் எலி நடமாட்டம் கட்டுப்படும்.