10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!
சென்னையில் இயங்கி வரும் ஐஐடியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
சென்னையில் உள்ள கிண்டியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது ஐஐடி அதாவது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் வெளியிட்டுள்ளது. பணியின் பெயர் மற்றும் பணி பற்றிய மற்ற விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
பணியின் பெயர்…
ஐஐடியில் காலியாக இருக்கும் தலைமை பாதுகாப்பு, உதவி பாதுகாப்பு அலுவலர், உதவி பதிவாளர், சமையலர், டிரைவர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
காலிப்பணியிடங்கள்…
மொத்தம் 64 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி குரூப் ஏ பதவிகளில் 4 இடங்களும், குரூப் பி பதவிகளில் 16 காலியிடங்களும், குரூப் சி பதவிகளில் 44 பணியிடங்களும் காலியாக இருக்கின்றது.
கல்வித் தகுதி…
இதில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்…
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பொதுப் பிரிவினராக இருந்தால் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதே போல எஸ்சி, எஸ்டி பிரிவினர் பெண்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்…
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை…
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://www.iitm.ac.in/ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் முகப்பு பக்கத்தில் Career என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் Non Teaching Position என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.