பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு!

0
132
#image_title

பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு!

நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் பாஜக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சிலிண்டரின் விலை 2000 ரூபாயாக உயரும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

ஏற்கனவே பாஜக கட்சி இரண்டு முறை வெற்றி பெற்று கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வருகின்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில் தேர்தலில் வெற்றி பெற தேவையான முயற்சிகளை பாஜக செய்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்திய அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயரக்கூடும் என்றும் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தப் போகின்றோம் என்றும் கூறினார்.

அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் “நாங்கள் இலவசமாக உங்களுக்கு அரிசி வழங்கினோம். பாஜக கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் சிலிண்டர் விலையை 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

நீங்கள் சமையல் செய்ய மீண்டும் அடுப்பை பயன்படுத்த வேண்டும். விறகு அல்லது மாட்டு சாணம் இவற்றைத் தான் அடுப்பு எரிய பயன்படுத்த போகின்றோம். பாஜக கட்சி மேற்குவங்கத்தையோ அல்லது பழங்குடி மக்களையோ நேசிப்பது கிடையாது” என்று குறிப்பிட்டார்.