உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

0
163

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டது. அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைக்கான பதவிக்காலம் ஏழு ஆண்டுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய கீழே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு பதவி நிலைகளுக்கும் ஒவ்வொரு சம்பள அளவுகோள் கொடுக்கப்பட்டிருக்கும். உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-I 8ம் நிலைக்கு 7வது CPC-இன் படி ரூ.47,600-ரூ.1,51,100 வரை சம்பளம் அறிவித்துள்ளனர். உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ் நிலை 7 இல் உள்ளவர்களுக்கு ரூ. 44,900-1,42,400 வரை நிர்ணயித்துள்ளனர். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I/எக்ஸிகியூட்டிவ் நிலை 5ல் உள்ளவர்களுக்கு 7வது CPC-இன் படி ரூ.29,200-ரூ92,300 என சம்பளம் உள்ளது.

ஜூனியர் இன்டெலிஜென்ஸ் அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ்களுக்கு 7வது CPC-இன் படி ரூ. 25,500- 81,100 என சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/எக்ஸிகியூட்டிவ் நிலை 3 பதவிகளுக்கு 7வது CPC இன் படி ரூ.21,700 – 69,100 சம்பளம் பெறுவார்கள். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I மோட்டார் டிரான்ஸ்போர்ட் 7வது CPC படி ரூ. 2800 தர ஊதியத்துடன் ரூ. 5200-20200 வரை சம்பளம் பெறலாம். செக்யூரிட்டி அசிஸ்டென்ட் நிலை 3ல் உள்ளவர்கள் 7வது CPC இன் படி ரூ.21700-69100 சம்பளம் பெறுவார்கள்.

விருப்பமுள்ள அதிகாரிகள் பயோ-டேட்டாவை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு, அவர்களுடைய கல்வி மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் நகல்களுடன், உதவி இயக்குநர்/ஜி-3, உளவுத்துறை பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ் பி மார்க், பாபு தாம்,புதுடெல்லி-110021 என்கிற அட்ரஸ்களுக்கு அனுப்பலாம். இதில் அனுப்பப்படும் அனைத்து விவரங்களையும் உண்மைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

Previous articleதினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??
Next articleகை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?