இந்த ஆவணங்கள் இருந்தால்.. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.1000000 வரை கடன் பெற முடியும்!!
மத்திய அரசானது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் புதிதாக தொழில் ஆரம்பிக்க விரும்பும் நபர்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால் ஏழை மக்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மூலம் ஒரு நபர் ரூ.50,000 முதல் ரூ.1,000,000 வரை கடன் பெற முடியும்.இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் எந்த ஒரு உத்திரவாதம் இன்றி கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான்.இதனால் ஏழை,நடுத்தர மக்களின் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை எளிதில் நிறைவேறும்.இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் 18 வயது 65 வரை உள்ள இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்:
*அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
*கடன் வாங்கிய பின்னர் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்தி விட வேண்டும்.
*எளிதில் கடன் பெற முடியும்.
விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
1)வங்கி கணக்கு எண்
2)ஆதார் அட்டை
3)இருப்பிட சான்றிதழ்
4)பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
5)பான் கார்டு
6)பிறப்புச் சான்றிதழ்
7)ஓட்டர் ஐடி
8)ஓட்டுநர் உரிமம்
9)வணிக முகவரி சான்று
10)கடந்த 6 முதல் 1 வருட வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
கூட்டுறவு வங்கி,கிராமப்புற வங்கிகளில் முத்ரா கடன் வழங்கப்பட்டு வருகிறது.இந்த வங்கிகளில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் கிடைக்கும்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தியிட்டு கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் கடன் வழங்கப்படும்.