இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

Photo of author

By Gayathri

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம்.

நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய செய்திகளை முன்கூட்டியே நமக்கு தெரிவிக்கும். சிலர் காலையில் எழுந்தவுடன் கனவுகள் குறித்து மற்றவர்களிடம் சொல்வார்கள். ஆனால், ஒரு சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் கூறவே கூடாதாம்.. அப்படிப்பட்ட கனவு என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் –

வெள்ளி கலசம்:

நாம் தூங்கும்போது கனவில் வெள்ளி நிரப்பப்பட்ட பானையையோ, வெள்ளி கலசத்தையோ பார்த்தால் அது மகிழ்ச்சியான விஷயம்தான். உங்களுக்கு நல்ல செய்திகள் வரப்போவதைக் குறிக்கும். ஆனால், கனவு அறிவியலின் படி, இந்த கனனை கண்டால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொல்லிவிட்டால் உங்கள் கனவு நனவாக்காது.

மரணம் :

சிலருக்கு தூங்கும்போது நெருக்கமான ஒருவர் மரணமடைவதுபோல் காண்பார்கள். இதுபோல் கனவு கண்டால் உடனே யாரிடமாவது சொல்லிவிடுவார்கள். முதலில் நீங்கள் இப்படிப்பட்ட கனவை கண்டால் பயப்படக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிரச்சினைகளிலிருந்து மீளப்போவதை இது குறிக்கிறது. மேலும், இந்த கனவைப் பற்றி நீங்கள் யாரிடமாவது சொன்னால் அதன் தாக்கம் குறையும்.

பூந்தோட்ட கனவு :

நாம் தூங்கும்போது மலர் தோட்டங்களைப் பார்ப்பது போல் கனவு வந்தால் நல்லது நடக்குமாம். அப்படிப்பட்ட கனவு உங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இருப்பதை குறிக்குமாம். மலர் தோட்டங்களை பார்ப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு செல்வம் செழிக்கப்போவதாக அர்த்தம். ஆனால் இந்த கனவை நீங்கள் வேறு யாரிடமும் சொன்னால், உங்களுக்கு அந்த கனவு பளிக்காது