இந்த பழக்கங்கள் இருந்தால் கட்டாயம் உங்கள் லிவர் வேலை செய்யாது!! எச்சரிக்கை!!

Photo of author

By Rupa

 நமது உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை நீக்க்கும் வேலையை கல்லீரல் செய்கிறது.அதேபோல் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.அதிக முக்கியத்துவம் வாய்ந்த உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இன்று நாம் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.ஊட்டச்சத்து இல்லாத ருசியான உணவுகளை விரும்பி உண்பதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக நாம் காலையில் பின்பற்றும் சில தவறான பழக்கங்களால் கல்லீரல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலில் உள்ள இதர உறுப்புகளில் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.இதனால் எளிதில் கொடிய நோய்கள் உருவாகிவிடுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

காலையில் எண்ணையில் பொரித்த,வறுத்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள் கல்லீரலில் குவிந்து உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

அதேபோல் முந்தின நாள் மீதமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இதனால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு அதன் செயல்பாடுகளை பலவீனப்படுத்திவிடும்.

காலையில் எழுந்ததும் புகைப்பிடித்தல்,மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் கல்லீரல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்றுநோய் உருவாக வழி வகுத்துவிடும்.அதேபோல் உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் கல்லீரலின் செயல்பாடு பலவீனமடையும்.எனவே காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொளவ்து எளிய உடற்பயிற்சி செய்வது மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவது போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்து கல்லீரலின் ஆரோக்கியத்தை மேப்படுத்துங்கள்.