இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள்..!! இல்லையென்றால் முன்னேற்றத்தை தடுக்கும்..!!

Photo of author

By Janani

இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள்..!! இல்லையென்றால் முன்னேற்றத்தை தடுக்கும்..!!

Janani

நம்முடைய வீட்டில் நாம் ஒரு சில பொருட்களை பழையது என்று தள்ளி வைத்து இருப்போம். அல்லது அதனுடைய பயன்பாடு நமக்கு தேவைப்படாமல் போயிருக்கும் அதனால் மூலையில் போட்டு வைத்திருப்போம். புதியன வந்ததும் பழைய பொருட்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அப்படி நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டாகிவிடும்! அப்படியான பொருட்களை எப்படி வைக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் பழைய, தேவையில்லாத, உடைந்த அல்லது பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றுவது அவசியம். குறிப்பாக, பழைய செருப்பு, துடைப்பம், உடைந்த கண்ணாடி, பழைய சைக்கிள், டிவி, ரேடியோ போன்றவற்றை அகற்றுவது நல்லது.

வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எப்போதும் பளிச்சென புதிய தோற்றத்தை தருவதாக இருந்தால் மட்டுமே மனதில் உற்சாகம், மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் வறுமை இருந்தால், அந்த வறுமையை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் வகையிலான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அந்த வறுமை அப்படியே வீட்டில் தங்கிவிடும். இதை தவிர்க்க எவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்பது முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. பழைய துணிகள்:

பழைய துணிகளை உடுத்தாமல் இருந்தால், அவைகள் கிழியாமலும் இருந்தால், மற்றவர்களுக்கு தானமாக தரலாம்.உடுத்தும் துணிகளை துவைக்காமல் தானம் தரக்கூடாது. கிழிந்த துணிகளையும் தானம் தரக்கூடாது. துவைத்த துணிகளே என்றாலும், அதை கசங்கி போய் தானமாக தரக்கூடாது.

சரியாக மடித்து, ஒரு பேப்பரில் சுற்றி வைத்து தானம் தரவேண்டும். அதாவது தானம் தரும்போது, அதை வாங்குபவர்களின் மனம் குளிர வேண்டும்.

2. பழைய அகல் விளக்குகள்:

பழைய அகல் விளக்குகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம். புதிய அகல் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றினாலும், இந்த பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருந்தால், சுத்தம் செய்து விளக்கேற்றலாம். இதற்கு முன்னதாக சுடுநீரில் விளக்குகளை போட்டு, அதில் சோப்பு பவுடரை கொட்டி கலந்து ஊறவைக்க வேண்டும்.

விளக்குகள் நன்றாக ஊறினால்தான், பழைய எண்ணெய் பிசுக்கள் தங்கியிருந்தாலும் நீங்கிவிடும். இதுபோல பழைய அகல் விளக்குகள் அனைத்தையும் சேர்த்து கழுவி உலரவிட்டு பயன்படுத்தலாம்.

3. பழைய காலண்டர்:

சாமி படம் போட்ட பழைய காலண்டர்கள் இருந்தால், அதனை சிலர் குப்பையில் போட்டுவிடுவார்கள். சிலர் கோவிலில் மரத்தடியில், குளத்தடியில் வைத்துவிடுவார்கள். அல்லது வெளியில் கொண்டு சென்று வீச மனமின்றி, வீட்டிலேயே வைத்திருப்பார்கள்.
மேலும் சிலர், பழைய காலண்டர் மீதே புது காலண்டரை மாட்டி விடுவார்கள்.

இதுபோன்ற காரணங்களினாலும், குடும்பத்தில் இன்னல்கள் அதிகமாகும். வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையை இவை ஏற்படுத்திவிடும். குடும்பத்திலும் எதிர்மறை ஆற்றலையும் உண்டுபண்ணிவிடும். பழைய காலண்டர்கள் என்றாலே அவைகளை முதலில் ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.

4. பழைய விளக்குத் திரிகள்:

தீபத்திரியை மாற்றும்போது பழைய திரியை என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் குழம்பக்கூடும். சிலர் குப்பையில் போட்டுவிடுவார்கள். இப்படி செய்யக்கூடாது. பழைய எரிந்த திரிகள் அனைத்தும் சிறிது சிறிதாக சேர்த்து வைக்கலாம். ஏதேனும் ஒருநாளில் இரவில் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி கழிக்கலாம். பழைய திரிகளை தூபக்காலில் போட்டு அனைவருக்கும் வலமிருந்து இடமாக 3 முறையும், இடமிருந்து வலமாக 3 முறையும் திருஷ்டி கழிக்க செய்யலாம்.

திருஷ்டி கழித்த திரிகளையும் குப்பையில் போட்டுவிடக்வடாது. இவைகளையும் வீட்டு வாசலிலேயே குவித்து எரிக்க வேண்டும். திரிகள் எரிந்து சாம்பலானதும், அந்த சாம்பலையும் குப்பையில் கொட்டாமல், ஓடும் நீர் அல்லது சமையலறை சிங்க்கில் கொட்டி தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.

5. உடைந்த பொருட்கள்:

அதேபோல மொட்டை மாடியில் உபயோகப்படுத்தாத பொருட்களை போட்டு வைக்கக்கூடாது. உதாரணத்துக்கு உடைந்து போன சேர்,டேபிள் உள்ளிட்ட நாற்காலிகள், பழைய துடைப்பங்கள், இரும்பு பொருட்களை போட்டு வைக்கக்கூடாது. தேவையில்லை என்றால், உடனே அவைகளை தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். மாடி சுத்தமாக இருக்க வேண்டும். ஒருசிலர், அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்டவைகளை போட்டு வைத்திருப்பார்கள். இவைகளை வெளியில் எறிந்துவிட வேண்டும்.

அதேபோல வீட்டிற்குள் நின்று போன கடிகாரம், உடைந்த கடிகாரங்களை பயன்படுத்தவும் கூடாது, வைத்திருக்கவும் கூடாது.
வீட்டில் குவியலாக செருப்புகளை போட்டு வைப்பதும் பிரச்சனைகளை தந்துவிடும். பயன்படுத்தாத பழைய செருப்புக்கள் இருந்தால் முதலில் அதனை வெளியே வீசிவிட வேண்டும். பழைய செருப்புக்களை வைத்திருப்பதும் கஷ்டத்தை தந்துவிடுமாம்.