இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் சிறுநீரகத்தில் நச்சுக் கழிவுகள் அதிகளவு தேங்கி அதன் செயல்பாட்டை சீர்குலைக்க செய்கிறது.சிறுநீரகம் செயலிழக்க முக்கிய காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் தான்.இந்த சிறுநீரக பிரச்சனையை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்ள தவறினால் நிச்சயம் சிறுநீரக செயலிழப்பை சந்திக்க நேரிடும்.
ஒருவரது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்பதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும்.சிறுநீரகம் பிரச்சனையை முகம் மற்றும் கண்களை வைத்தே எளிதில் கண்டறிந்துவிடலாம்.
உங்கள் கண்களில் தொடந்து வீக்கம் இருந்தால் சிறுநீரக பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.சிறுநீரகத்தால் நீரை வெளியேற்ற முடியாமல் போனால் கண்களை சுற்றியுள்ள திசுக்கள் வீக்கமடையும்.
இரவு நேரத்தில் கண்களை சுற்றி அதிக வலி ஏற்பட்டால் சாதாரணமாக கருதிவிடாதீர்கள்.இது சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறியாகும்.கண்களை சுற்றி அதிக கருவளையம் தோன்றினால் அது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அர்த்தம்.சரும வறட்சி அதிகமானால் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அர்த்தம்.சரும நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் அது சிறுநீரக பிரச்சனைக்கான அறிகுறிகளாகும்.