இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் KIDNEY FAILURE ஆகிவிடும்!! உடனே செக் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் KIDNEY FAILURE ஆகிவிடும்!! உடனே செக் பண்ணுங்க!!

Rupa

If you have these symptoms, your KIDNEY FAILURE!! Check now!!

நமது உடலில் படியும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது.இதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.ஆனால் நம் இந்தியாவில் கோடி கணக்கான மக்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.

சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் அதை அலட்சியம் கொள்ளாமல் ஆரம்ப நிலையில் உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் பெரும்பாலானோர் செய்யும் அலட்சியத்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.

உங்கள் சிறுநீரகம் செயலிழக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

1)சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பொழுது தூக்கமின்மையை அனுபவிக்க நேரிடும்.சிறுநீரகம் சரியாக செயல்படாமல் நச்சுக் கழிவுகள் இரத்தத்தில் தேங்கிவிடுவதால் தான் தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுகிறது.

2)சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டால் துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறும்.அது மட்டுமின்றி சிறுநீர் கழிப்பதில் சிரமம்,எரிச்சல்,வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

3)சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் குமட்டல்,பசியின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்கக் கூடும்.

4)சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டால் சிறுநீர் வெளியேறுவது தடைபடும்.இதனால் கை,கால்,கணுக்கால்,பாதம் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.

5)சிலருக்கு தோல் அரிப்பு,தோல் நிறம் மாற்றம்,தோல் உலர்ந்து போதல்,நமைச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

6)உயர் இரத்த அழுத்தம்,உடல் சோர்வு,இரத்த சோகை போன்றவை சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகளாகும்.