ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,வயிறு வலி,வயிற்றுப்போக்கு போன்ற வயிறு கோளாறுகளால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற வயிறு கோளாறுகளால் அசௌகரிய சூழல் ஏற்படுவதோடு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.இந்த வயிறு கோளாறுகளை கை வைத்தியங்கள் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ள இயலும்.
வாயுத் தொல்லை
எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள்,காரம் நிறைந்த உணவுகளால் வயிற்றில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்துகிறது.இதை பெருங்காயத் தூள் பயன்படுத்தி சரி செய்து கொள்ள இயலும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
வயிறு உப்பசம்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் வயிறு உப்பசம் சரியாகும்.
வயிற்றுப்போக்கு
உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவுகளை சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.இதை சரி செய்ய தயிரில் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் கலந்து சாப்பிட வேண்டும்.
அஜீர்ணக் கோளாறு
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால் அஜீர்ணக் கோளாறு நீங்கும்.
மலச்சிக்கல்
ஒரு கிளாஸ் சூடான நீரில் 1/2 எலுமிச்சம் பழ சாறு மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வயிற்றுவலி
100 மில்லி வெதுவெதுப்பான நீரில் சம அளவு வெந்தயத் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கி குடிக்கவும்.இப்படி செய்தால் வயிற்றுவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.