BSNL-இன் இந்த சேவை இருந்தால்.. இனி லைவ் டிவி சேனல் பார்க்க இன்டர்நெட் தேவையில்லை!!

Photo of author

By Gayathri

மக்கள் அனைவரும் கேபிள் டிவியில் இருந்து ஏர்டெல்,ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களுக்கு மாறிவருகின்றன.இந்த ஏர்டெல்,ஜியோவானது லைவ் டிவி சேனல்கள்,OTT ஆப்ஸ் போன்ற சலுகைகளை குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.ஆனால் இந்த லைவ் டிவி சேனல்களை பார்க்க இன்டர்நெட் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் இன்டர்நெட் இல்லாமலேயே லைவ் டிவி சேனல்களை பார்க்கும் புதிய வசதியை BSNL அறிமுகப்படுத்த இருக்கிறது.BSNL-இன் இந்த புதிய சேவை முதன் முதலில் தமிழம் மற்றும் மத்திய பிரதேசத்தில் அறிமுகமாக இருக்கின்றது.

மத்திய தொலைத்தொடர்பு துறை நிறுவனமான BSNL பைபர் டூ தி ஹோம்-எப்டிடிஎச் சேவை மூலம் இன்டர்நெட் இல்லாமலேயே லைவ் டிவி சேனல்களை வழங்க இருக்கின்றது.BSNL-இன் பைபர் டூ தி ஹோம்-எப்டிடிஎச் சேவை மூலம்க் இன்டர்நெட் சேவை முடிந்த பிறகும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து லைவ் டிவி சேனல்களை காண முடியும்.BSNL வழங்க இருக்கின்ற இச்சேவையால் ஜியோ நிறுவனம் வாயடைத்து போயிருக்கிறது.

இந்த சேவை மூலம் லைவ் டிவி சேனல்களை எந்தஒரு குறையும் இன்றி எளிதில் பார்க்க முடியும்.தற்பொழுது BSNL நிறுவனமானது பைபர் சேவை மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் அதிகமான இலவச டிவி சேனல்களை வழங்க திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பைபர் டேட்டாவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

BSNL நிறுவனம் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.அதன் பிறகு படிப்படியாக இதர மாநிலங்களுக்கு இத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.