இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!!

Photo of author

By Divya

இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!!

இந்தியாவில் தங்கம் விலை தான் தற்பொழுது ட்ரெண்டில் உள்ளது.வரலாறு காணாத அளவிற்கு உயரும் தங்கத்தால் ஏழைகளின் நகை ஆசை வெறும் ஆசையாகவே போய்விடும் போல.இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் நகைகளை வாங்க முடியாவிட்டாலும் இருக்கின்ற நகைகளையாவது பத்திரப்படுத்தி கொள்ளவும்.

ஆனால் நம்மில் பலரது நகைகள் வங்கி,அடகு கடைகளில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறது.எதிர்பாராத செலவிற்காக நகைகளை அடகு வைத்து விட்டு அதன் மீட்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

இதை வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்று செய்ய வேண்டும்.இந்த பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள் மண் அகல் விளக்கு,பஞ்சு திரி,நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்.

இந்த பரிகாரம் செய்ய உள்ள ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை நேரத்தில் எழுந்து வீட்டு வாசலில் சானம் தெளித்து கோலமிட்டு கொள்ளவும்.பிறகு தலைக்கு குளித்து விட்டு 2 ம்,மண் அகல் விளக்கை வீட்டில் நிலை வாசல் கதவுகளின் இரு பக்கத்திலும் வைக்கவும்.

இந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி தீபம் ஏற்றவும்.பிறகு ஒவ்வொரு விளக்கிலும் 3 சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றவும்.

அதன் பிறகு அடகில் உள்ள நகைகளை மீட்க வழிகள் பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு 9 ஞாயிற்றுக் கிழமை விளக்கேற்றி வந்தால் அடகில் உள்ள நகைகளை மீட்க வழி பிறக்கும்.