“வெற்றிலை + இஞ்சி” இருந்தால்.. நுரையீரலில் தேங்கிய நாள்பட்ட சளி பனி போல் கரையும்!!

Photo of author

By Divya

மழைக்காலத்தில் சளி,காய்ச்சல் பரவலான நோய்த்தொற்றாக இருக்கிறது.குறிப்பாக நுரையீரலில் சளி தேங்கினால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் உதவும்.

தேவைப்படும் பொருட்கள்

1.ஒரு துண்டு இஞ்சி
2.ஒரு வெற்றிலை
3.தூயத் தேன் சிறிதளவு

பயன்படுத்தும் முறை

ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள்.பிறகு இதை நீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து அதன் சாறை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு விழுது பதத்திற்கு அரைக்கவும்.

இந்த வெற்றிலை விழுதை இஞ்சி சாறு வைத்துள்ள கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு 10 மில்லி அளவு நீரை சூடு செய்து அரைத்த கலவையில் சேருங்கள்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகினால் நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி பனிப்போல் உருகி மலத்தில் வந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்

1.பத்து கிராம் திரிபலா பொடி
2.ஒரு தேக்கரண்டி தேன்

பயன்படுத்தும் முறை

நாட்டு மருந்து கடையில் திரிபலா சூரணம் கிடைக்கும்.ஒரு பாக்கட் வாங்கிக் கொள்ளுங்கள்.

பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து திரிபலா பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து ஒன்று அல்லது ஒன்றரை தேக்கரண்டி தேனை திரிபலா பொடியில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இப்படி தொடர்ந்து மூன்று தினங்களுக்கு சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கிய சளி முழுமையாக கரைந்துவிடும்.