உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

Divya

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது.

சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி விடும்.

இவ்வாறு பணம் நம்மிடம் தங்க தொடர்ந்து 48 நாட்களுக்கு உங்கள் பீரோவில் பணம் வைக்கும் அறையில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள். நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்…

*துவரை
*பச்சரிசி
*கொண்டைக்கடலை

ஒரு பாட்டிலில் ஒரு கைப்படி அளவு துவரை, ஒரு கைப்படி பச்சரிசி மற்றும் 1 கைப்படி அளவு கொண்டைக்கடலை போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து மூடி பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்து விடவும்.

48 நாட்களுக்கு பின்னர் அந்த பாட்டிலில் உள்ள ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

துவரை, பச்சரிசி, கொண்டைக்கடலை ஆகியவற்றை பறவைகளுக்கு உணவாக கொடுத்து விடவும். இவ்வாறு செய்தால் பண பிரச்சனை நீங்கி பண மழை கொட்டும்.