குப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் எருக்கன் செடியின் நன்மைகள் தெரிந்தால் வாயடைத்து போயிடுவீங்க!!

0
342
If you know the benefits of Erukan plant
If you know the benefits of Erukan plant

குப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் எருக்கன் செடியின் நன்மைகள் தெரிந்தால் வாயடைத்து போயிடுவீங்க!!

கிராமபுற பகுதி,சாலை ஓரங்களில் செழிப்பாக வளரக் கூடிய ஒரு மூலிகை தாவரம் எருக்கன் செடி.இதில் வெள்ளை எருக்கு,நீல எருக்கு என இரு வகைகள் இருக்கிறது.இந்த இரு வகை எருக்குகளில் வெள்ளை எருக்கில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

எருக்கன் செடியில் உள்ள வேர்,இலை,பூ,காய் மற்றும் இலை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.எருக்க இலையை நல்லெண்ணெயில் வதக்கி உடலில் வலி,வீக்கம் உள்ள இடத்தில் வைத்தால் அவை சில மணி நேரத்தில் வற்றி விடும்.

எருக்க இலையை நெருப்பில் போட்டு எரியவிட்டு அந்த புகையை சுவாசித்தல் சளி,ஆஸ்துமா,சுவாச பிரச்சனை சரியாகும்.எருக்க இலை புகையை சுவாசிப்பதால் உடலில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.

எருக்க இலையை தோசைக்கல்லில் வைத்து சூடாக்கி குதிங்காலில் வைத்தால் பாத வலி,பாத எரிச்சல் குணமாகும்.

எருக்க இலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு மூட்டு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தால் மூட்டு வலி,வீக்கம் சரியாகும்.

தோல் வியாதியை குணமாக்க கடுகு எண்ணையில் சிறிது எருக்க இலை பேஸ்ட்,மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி மூட்டு மற்றும் பாதங்களில் தடவி வந்தால் வலி,வீக்கம் குறையும்.எருக்கம் பூவை கல் உப்புடன் சேர்த்து அரைத்து வெயிலில் நன்கு காய வைத்து மீண்டும் பவுடர் பதத்திற்கு மாற்றி பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

எருக்க வேரை நீர் விட்டு அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும பாதிப்பு முழுமையாக அகலும்.எருக்க இலை பாலை புண்கள் மீது அப்ளை செய்தால் அவை சில தினங்களில் சரியாகி விடும்.எருக்க இலையை அரைத்து தீக்காயங்கள் மீது பற்றுப்போட்டால் அவை விரைவில் ஆறிவிடும்.