பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாகும்.இந்த பப்பாளி பழம் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.
பப்பாளி பழத்தை போன்றே அதன் விதையிலும் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழ விதையை உட்கொள்வதால் உடலில் செரிமானப் பிரச்சனை மேம்படும்.இது தவிர இன்னும் பல நன்மைகள் பப்பாளி விதையில் அடங்கியிருக்கிறது.
பப்பாளி விதை ஆரோக்கிய நன்மைகள்:
1)இந்த விதையில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த விதையை பொடித்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகினால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
2)உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க பப்பாளி விதையை பொடித்து தேநீர் செய்து பருகலாம்.
3)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளி விதை பொடியை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
4)உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பப்பாளி விதை உதவுகிறது.பப்பாளி விதை பானம் பருகுவதால் சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
5)சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இருக்க பப்பாளி விதையை பொடித்து தண்ணீரில் கலந்து பருகலாம்.
6)கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட பப்பாளி விதையை பொடித்து தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
7)மாதவிடாய் வலி குறைய பப்பாளி விதையை பொடித்து சூடான நீரில் கலந்து பருகலாம்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற பப்பாளி விதை பொடியை உட்கொள்ளலாம்.
8)கால்சியம் சத்து கிடைக்க பப்பாளி விதையை பழத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பப்பாளி விதையை உட்கொள்ளலாம்.
பப்பாளி விதை பொடி தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கப் அளவிற்கு பப்பாளி விதை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பப்பாளி விதை பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.