இது தெரிந்தால் இனி ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இவை பிபி சுகரை கன்ட்ரோல் செய்யுமாம்!!

Photo of author

By Divya

இது தெரிந்தால் இனி ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இவை பிபி சுகரை கன்ட்ரோல் செய்யுமாம்!!

பழங்களில் அதிக சுவை கொண்ட பழம் ஆரஞ்சு.ஆரஞ்சு பழம் சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.ஆனால் நாம் வேஸ்ட் என்று தூக்கி எரியும் அதன் தோலில் தான் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

ஆரஞ்சு பழ தோலில் வைட்டமின் சி,நார்ச்சத்துக்கள்,ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.இவற்றை உலர்த்தி பொடி செய்து டீ போட்டு குடித்து வந்தால் உடலிலுள்ள பல வியாதிகள் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலை சாப்பிட்டு வந்தால் சரும புற்றுநோய் அபாயம் குறையும்.அதேபோல் ஆரஞ்சு தோல் நுரையீரல் புற்றுநோயை குணமாக்க உதவுகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.தோல் தொடர்பான பாதிப்புகளை முழுமையாக குணமாக்க உதவுகிறது.ஆரஞ்சு தோலில் உள்ள பாலி மெத்தாக்சிலேடட் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

அதேபோல் ஆரஞ்சு தோலில் உள்ள பெருலாய்ஸ் புட்ரெசின் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு தோல் டீ அருந்தி வரலாம்.அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஆரஞ்சு தோல் டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

ஆரஞ்சு தோல் டீ தயாரிக்கும் முறை:-

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு தோல்
2)தேன்

செய்முறை:-

ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் தயாரித்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தின் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து அருந்த வேண்டும்.