நாசியில் இந்த எண்ணெய் விட்டால்.. மூக்குச்சளி அழுக்கு தூசி அடித்துக் கொண்டு வெளியேறும்! உடனே ட்ரை பண்ணுங்கள்!
மூக்கு துவாரத்தில் அதிகளவு சளி அடைத்துக் கொள்ளுதல்,மாசடைந்த காற்றை சுவாசித்தல் போன்ற காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகிறது.உலகில் இருக்கின்ற உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு காற்று மிகவும் முக்கியமான ஒன்று.மூக்கு,நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் காற்றை உள் அனுப்புதல்,உள்ளிருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றை வெளியேற்றுதல் வேலையை செய்கிறது.
இந்த மூக்கிற்குள் அதிகளவு அழுக்கு சேர்ந்தால் சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.நாள்பட்ட சளி,ஆஸ்த்துமா போன்ற பாதிப்புகள் இருந்தால் மூக்கடைப்பு,மூச்சு திணறல் போன்ற பாதிப்பு ஏற்படும்.
இந்த மூக்கடைப்பு பாதிப்பை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மூக்கடைப்பு ஏற்படுவது இயல்பானது என்றாலும் அதை முழுமையாக குணமாக்கி கொள்வது மிகவும் நல்லது.
மூக்கடைப்பால் ஏற்படும் பாதிப்புகள்:
1)மூச்சு விடுதலில் சிரமம்
2)நுகர்திறன் குறைதல்
3)தூக்கமின்மை
4)சைன்ஸ்
5)ஆஸ்துமா
மூக்கடைப்பு பாதிப்பை குணமாக்கும் மூலிகை தைலம்:
தேவைப்படும் பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்த கருஞ்சீரக பொடி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் தயாரித்த கருஞ்சீரக எண்ணெய் 2 சொட்டு மூக்கில் விடவும்.இவ்வாறு செய்து வந்தால் மூக்கடைப்பு முழுமையாக குணமாகும்.