இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!
கோயில்களில் வீசக் கூடிய தெய்வீக மணம் வீட்டில் வீச வேண்டுமா… அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள தீபப் பொடியை வைத்து விளக்கேற்றவும்.
இந்த தீபப் பொடி நறுமணம் நிறைந்த ஒன்று. வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக் கூடியது.
வாசனை தீபப் பொடியால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரித்து கெட்ட எண்ணங்கள், கண் திருஷ்டி அகலும்.
தீபப் பொடி தயார் செய்யும் முறை…
*பட்டை
*கிராம்பு
*ஏலக்காய்
*கற்கண்டு
*பச்சை கற்பூரம்
1)இரு துண்டு படையை நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
2)அடுத்து மிக்ஸி ஜாரில் பட்டை பொடி, கிராம்பு 7 முதல் 8 வரை, ஏலக்காய் 4, கற்கண்டு 1 ஸ்பூன், மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து அரைத்து பொடி செய்யவும்.
3)இந்த பொடியை ஒரு டப்பாவில் சேர்த்து மூடி போட்டு பூஜை அறையில் வைத்து விடவும்.
4)அதன் பின்னர் ஒரு மண் அகல் எடுத்து அதை பன்னீர் கொண்டு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளவும்.
5)இந்த அகலில் தேவையான அளவு நெய் மற்றும் தயார் செய்த வாசனை பொடி 1 ஸ்பூன் அளவு சேர்க்கவும். பிறகு ஒரு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். இந்த தீபத்தால் வீடு முழுவதும் ஒருவித தெய்வீக நறுமணம் வீசும்.