அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

Photo of author

By Parthipan K

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

நம் வாழ்வில் செய்வினை நம்மை பின் தொடர்ந்து வரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் ஒருவருக்கு நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த செய்வினை பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது போன்ற செய்வினை பாவங்களை குறைத்துக் கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் கூடிய சக்தி வாய்ந்த தீபம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போறோம்.

நல்ல விஷயத்தை நாம் செய்தாலும் நமக்கு கெட்டது நடக்கிறது என்றால் நாம் இதற்கு முன் செய்த கெட்ட விஷயங்களுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. எனவே இந்த சமயத்தில் இறைவனை சகித்துக் கொள்ளாமல் நீங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாவம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனின் கண்களில் இருந்து எவராலும் தப்பிக்க முடியாது. என்னதான் நாம பரிகாரம், பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் நீங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீருவீர்கள்.

ஆனால் ஒரு சிலர் அறியாமல் செய்த பாவத்திற்காகவும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்தாலும் பாவத்திற்கான தண்டனைகளை சாபம் என்கிறோம். கர்மா என்பது கெட்டது மட்டுமல்ல நீங்கள் நல்லது செய்தாலும் அது உங்களை பின் தொடரும். நல்ல கர்ம வினை பயன்களையும் சேர்த்தே அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால் அதனை நீக்கக்கூடிய சக்தி கொண்டவர் விநாயகர் ஆவார். இவரை தொட்டு வணங்கி வழிபட்டால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி என்பதே இருக்காது.

இத்தகைய விநாயகரின் லட்சணமாக விளங்கும் அரச இலை ஒன்றை பிரஷ்சாக பறித்து வைத்துக் கொள்ளுங்கள். அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால் வேண்டிய வேண்டுதல் வேண்டிய படி நிறைவேறும் என்கிற ஐதீகம். அதே போல அரச இலையை வைத்து செய்யப்படும் இந்த பரிகாரமும் வேண்டிய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தரும் அதீத சக்தி கொண்டுள்ளது.

ஒரு அரச மர இலையை நன்கு சுத்தம் செய்து தண்ணீரால் கழுவி விட்டு விநாயகருக்கு முன்பாக ஒரு தாம்பூல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தாம்பூல தட்டு மற்றும் விநாயகருடைய அரச மர இலைக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தாம்பூல தட்டு முழுவதும் வாசனை மிகுந்த உதிரிப் பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அரச மர இலையின் மீது ஒரு அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அகல் விளக்கிற்கு சந்தனம் சிகப்பு பொட்டு இட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் நிற பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். பின்பு இதற்கு தீப ஹாரத்தி காண்பிக்க வேண்டும். மஞ்சள் நிற பஞ்சு திரி இல்லை என்றால் வெள்ளை நிற திரியை மஞ்சளில் தோய்த்து நன்கு காய வைத்து உலர வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நிற திரியை பயன்படுத்தி சனிக்கிழமைகளில் விநாயகருக்கு தொடர்ந்து அரச இலையில் தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய பாவங்களும் நீங்கி நமக்கு காரிய தடைகள் நீங்கி நல்ல காரியங்கள் நடக்கும்.