ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ?

0
131

ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ?

கிரந்திநாயகம் என்பது பட்டாசு காய் இப்படி ஊருக்கு ஊர் இவைக்கு பெயர் உண்டு. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளை உடைய தரையில் படரும் சிறு செடி. நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிற மலர்களைக் கொண்டது. பார்க்க அழகாக இருக்கும். இந்த காய்கள் சிறிதளவு நீர் சொட்டு பட்டால் கூட வெடித்து சிதற கூடிய காய்களை உடையது. சிறுவர்கள் இந்த காயை பறித்து தண்ணீரில் போட்டு வெடிக்க வைத்து பார்த்து ரசிப்பார்கள்.

மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த காய்கள் அனைத்தும் வெடித்துச் சிதறும்.இந்தச் செடிகள் தானாக வளரக்கூடியவை. முள் புதர்களிலோ அண்டை வீடுகளிலோ மற்றும் நீர் போகும் பகுதிகளிலோ இந்த செடிகள் அதிகம் காணப்படும்.இதில் உள்ள இலை, பூ, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயன்களைக் கொண்டது. இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்று கட்டி வர உடைந்து இரத்தம் சீழ் வெளியேறி குணமாகும். இலைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி சம அளவு பால் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கட்டிகள் வராது. உடலிலுள்ள உள் உறுப்புகளில் புற்று ரணங்கள் குணமாகும்.

ரத்த சர்க்கரை குறையும் பூ பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து தெளிவு இறுத்து 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விடக் கண்கோளாறு, கண்வலி பார்வை, மங்கல், கண்சிவப்பு கூச்சம் ஆகியவை தீரும். சமூல சாறு ஐம்பது மில்லி கொடுத்து அதன் இலையை அரைத்து விஷம் தீண்டிய இடத்தில் இருக்க கட்டி உலர விட வேண்டும்.இதனால் கடி பட்ட இடம் எறியாமல் வலி எடுக்காமல் இருக்கும் மேலும் பாம்பு நஞ்சுகளும் தீரும்.

author avatar
Parthipan K