இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

Photo of author

By Divya

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

Divya

Updated on:

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

இன்று பணக் கஷ்டத்தால் பணக்காரன், நடுத்தர மக்கள், ஏழை என்று அனைவரும் பல பிரச்சனைகளை பார்க்கின்றனர். தேவையை அறிந்து முன்கூட்டியே பணம் சேமித்து வைப்பனுக்கு கடன் ஏற்படாது. இன்று பணம் இருக்கிறது என்று தங்கள் இஷ்டத்திற்கு பணத்தை செலவழித்து விட்டு முக்கிய செலவு, எதிர்பாராத செலவு ஏற்படும் பொழுது பணம் இல்லாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் ஏராளம். இதனால் பெரும்பாலானோர் கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் கடனாளியாக வாழ்கின்றனர். இவ்வாறு வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க, கடன் வாங்காமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் 3 முறை செய்து வரவும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:-

1)ஏலக்காய்
2)அதிமதுரம்
3)ஓமம்
4)தேங்காய் எண்ணெய்
5)பஞ்சு திரி

50 கிராம் அதிமதுரம் மற்றும் 50 கிராம் ஓமம் வாங்கி தனித்தனியாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் 10 ஏலக்காயின் விதையை மட்டும் அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த மூன்று பொடியையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அரைத்த சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு சூடாக்கவும். இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

மாதத்தில் வரும் கரிநாள் மற்றும் பௌர்ணமி நாள் அன்று வீட்டு பூஜை அறையில் மண் அகல் வைத்து தயாரித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு மாதம் 3 முறை தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றி வந்தால் வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும். இனி கடன் வாங்கும் சூழல் ஒருபோதும் ஏற்படாது.