Astrology

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

நம் அன்றாட வாழ்க்கையை நடத்த பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.பணத்தை வைத்து தான் எதையும் வாங்க முடியும் என்ற நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இந்த கடன் அடைந்து பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வியாழன் அன்று செய்து வரவும்.வியாழன் குபேரருக்கு உகந்த நாள் ஆகும்.இந்த நாளில் வீட்டு பூஜை அறையில் உள்ள குபேரர் படத்திற்கு குங்கும பொட்டு வைத்து பூ மாலை சூட்டவும்.

அதன் பின்னர் குபேரர் படத்திற்கு முன்னர் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் பச்சரிசி கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கு வைத்துக் கொள்ளவும்.

இந்த விளக்கில் நெய் ஊற்றி பச்சை திரி போட்டு தீபம் ஏற்றவும்.பிறகு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் முழுமையாக அடைந்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வாரந்தோறும் வியாழன் அன்று குபேரருக்கு தீபம் போட்டு வழிபட்டு வந்தால் வாங்கிய கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைந்து போகும்.