இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் ஏற்கனவே நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் இந்த ஆஸ்திரேலியா தொடர் மட்டுமல்லாமல் நியூசிலாந்து தொடரை போலவே பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். இந்தப் போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவரும் குறைவான எண்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் அனைவரையும் கடுமையாக விலாசினார். அப்போது அவர் உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பேட்டிங் செய்தால் இப்படித்தான் இருக்கும். இனிமேல் நான் எப்படி சொல்கிறேனோ அதைப்போல பேட்டிங் செய்யுங்கள் என்று கறாராக டிரெஸ்ஸிங் ரூமில் கூறியுள்ளார். அதன்படி இன்று தொடங்கிய ஐந்தாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவர்கள் விளையாடி 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் கம்பீர் கூறிய அறிவுரையின்படி பேட்டிங் செய்த நிலைமையால் இந்திய அணி இவ்வாறு விளையாடுகிறது. இந்த பேட்டிங் இருக்கு காரணம் நேற்று அவர் கூறிய கருத்து தான் காரணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.