மனிதர்களுக்கு தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.நாள் முழுவதும் உடலுக்கு வேலை கொடுக்கும் நாம் இரவு நேரத்தில் தூங்குவதன் மூலம் உடலிற்கு ஓய்வு கொடுக்கின்றோம்.இரவு தூக்கம் பல்வேறு நிலைகளை கொண்டிருக்கின்றது.மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தூங்குவதில்லை.
சிலருக்கு குப்புறப்படுத்து உறங்கினால் தான் தூக்கம் வரும்.அதேபோல் சிலர் சுருண்டு படுத்து உறங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.சிலர் மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் இடது,வலது பக்கம் பார்த்தவாறு உறங்குவார்கள்.இதில் இடது பக்கம் பார்த்தவாறு உறங்கினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இடது பக்கம் பார்த்தவாறு உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ:-
1)இரவு உணவு உட்கொண்ட பிறகு செரிமானப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்களுக்கு தூக்கம் சீர்குலையும்.அவர்கள் இடதுபுறம் பார்த்தவாறு படுத்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.
2)இடதுபுறம் பார்த்தவாறு படுத்து உறங்குவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இடதுபுறம் பார்த்தவாறு உறங்கலாம்.
3)கர்ப்பிணி பெண்கள் இடதுபுறம் பார்த்தவாறு உறங்கினால் கருவில் வளரும் குழந்தையின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4)இடது பக்கம் பார்த்தவாறு உறங்குவதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.நரம்பு சார்ந்த பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
5)சிறுநீரக செயல்பாடு மேம்பட இடதுபக்கம் பார்த்தவாறு உறங்கலாம்.இடதுபுறம் உறங்கினால் நெஞ்செரிச்சல் பாதிப்பு குணமாகும்.இந்த நிலையில் தூங்குவதால் முதுகுவலி உண்டாவது தடுக்கப்படும்.
6)குறட்டை பிரச்சனை இருப்பவர்கள் இடதுபக்கம் பார்த்தவாறு உறங்கினால் அதில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
7)இடதுபுறம் பார்த்தவாறு உறங்குவதால் மண்ணீரலின் செயல்பாடு மேம்படும்.முதுகெலும்பு ஆரோக்கியம் மேம்பட இடதுபக்கம் பார்த்தவாறு உறங்கலாம்.ஆனால் இடது பக்கம் படுத்து உறங்குவது அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தவிர்த்துவிடுவது நல்லது.