இந்த இலையில் சட்னி செய்து சாப்பிட்டால்.. படுக்கையில் நீண்ட நேரம் என்ஜாய் பண்ணலாம்!!

Photo of author

By Divya

இந்த இலையில் சட்னி செய்து சாப்பிட்டால்.. படுக்கையில் நீண்ட நேரம் என்ஜாய் பண்ணலாம்!!

Divya

இன்று பெரும்பாலான ஆண்களின் பிரச்சனையாக இருப்பது தங்கள் துணையை திருப்தி படுத்த முடியவில்லை என்பதுதான்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கைமுறையால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.ஆண்கள் தங்கள் விறைப்புத் தன்மையை அதிகரிக்க கொத்தமல்லி தழையில் துவையல்,சட்னி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)சின்ன வெங்காயம்
3)பூண்டு பல்
4)இஞ்சி
5)தக்காளி
6)உப்பு
7)கடலை பருப்பு
8)உளுந்து பருப்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கட்டு கொத்தமல்லி தழையை எடுத்து தண்ணீர்விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தக்காளி பழத்தை த்தம் செய்துவிட்டு இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு தோல் தோல் நீக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு மற்றும் இஞ்சி துண்டை வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து தக்காளி பழத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் போட்டு வதக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு வறுத்த கடலை பருப்பு,உளுந்து பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.கொத்தமல்லி சட்னியை சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

அதேபோல் கொத்தமல்லி தழை,இஞ்சி மற்றும் தேன் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.