இந்த இலையில் லட்டு செய்து சாப்பிட்டால்.. முடி உதிர்தல் முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

இந்த இலையில் லட்டு செய்து சாப்பிட்டால்.. முடி உதிர்தல் முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கிடைக்கும்!!

Divya

நம் அன்றாட சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை வைட்டமின்கள்,இரும்பு,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கறிவேப்பிலையை கொண்டு லட்டு செய்தால் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)தேங்காய் – ஒரு மூடி
3)ஏலக்காய் – நான்கு
4)பேரிச்சை – 10
5)நெய் – ஒரு தேக்கரண்டி
6)முந்திரி பருப்பு – 10
7)பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கப் கறிவேப்பிலையை பாத்திரம் ஒன்றில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி எடுக்க வேண்டும்.பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி பரப்பி உலர்த்த வேண்டும்.

2.பிறகு அடுப்பில் வாணலி வைத்து உலர்ந்த கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் மொரு மொரு பதம் வரும் வரை வறுக்க வேண்டும்.இதனை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

3.பின்னர் ஒரு மூடி தேங்காயை துருவி வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.இதனை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அதே வாணலியில் நாட்டு வெல்லம் மற்றும் விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பாலத்தை போட்டு நன்கு உருகும் வரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

5.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இதனை நாட்டு வெல்ல பாகில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

6.அதன் பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு
முந்திரி பருப்பை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதனை கறிவேப்பிலை கலவையை கொட்ட வேண்டும்.

7.இதற்கு அடுத்து கால் தேக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை லட்டு பயன்கள்:-

**தினமும் ஒரு கறிவேப்பிலை லட்டு சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

**கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை லட்டு சாப்பிடலாம்.

**சருமம் சார்ந்த பாதிப்புகளுக்கு கறிவேப்பிலை லட்டு தீர்வாக இருக்கின்றது.

**எலும்பு பலம் அதிகரிக்க கறிவேப்பிலை லட்டு செய்து சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை லட்டு செய்து உட்கொள்ளலாம்.

**கருவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.