சில நேரங்களில் போக்குவரத்து இடையூறுகள் அல்லது தாமதமாக புறப்பட்டு இருப்பதன் காரணமாக பலர் தங்களுடைய ரயில்களை தவற விட்டுவிடுகின்றனர். இவ்வாறு தவறவிடப்பட்ட ரயிலின் டிக்கெட் களை வைத்து மற்ற ரயில்களில் பயணம் செய்வது மற்றும் அதனை மாற்றி பணமாக பெறுவது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது.
இது குறித்த இந்தியன் ரயில்வே விதிகள் தெரிவிப்பது :-
ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது அந்த டிக்கெட்டைகளை மாற்றிக் கொள்வது மற்றும் கேன்சல் செய்வது போன்ற செயல்முறைகளுக்கு பொருத்தமான விதிகளோடு தான் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இது போன்று முன்பதிவு செய்யக்கூடிய ரயில் டிக்கெட்டுகளை அந்த ரயில் முன்பதிவு செய்யப்பட்ட இடத்தை தாண்டுவதற்கு முன்பாக அதாவது தாண்டுவதற்கு சரியாக 4 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் ஐ கேன்சல் செய்தல் மற்றும் அந்த டிக்கெட்டை வைத்து வேறொரு ட்ரெயினில் பயணிப்பதற்கான மாற்று வழிகளை மேற்கொள்ள முடியும் என்று இந்தியன் ரயில்வே விதிகள் தெரிவித்து இருக்கிறது.
ஒருவேளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதன் மூலம் பாதி அளவு பணம் மட்டுமே வழங்கப்படும் என்றும் மீதி பணம் சேவை கட்டணமாக இந்தியன் ரயில்வேயால் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் உங்களுடைய ரயில் பயணத்திற்கு முன்னதாகவே தயாராக கிளம்பவில்லை என்றால் அல்லது தாமதமாகும் என்று தோன்றினால் உடனடியாக முன்பதிவு செய்த ரயில் பயணம் தொடங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாக உங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வது உங்களுடைய பணத்தை மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பாக அமையலாம். அதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்றும் உங்களுடைய ரயிலை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்றால் அதற்கான டிக்கெட் செல்லுபடி ஆகாது என்றும் வேறொரு ரயிலில் பயணிக்க அந்த ரயிலுக்கான புதிய டிக்கெட்டை எடுக்க வேண்டும் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்திருக்கிறது.