பாலில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்!

Photo of author

By Rupa

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைப்பேறின்மை என்பது அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.பெண்களை போன்று ஆண்களுக்கும் உடல் ஆரோக்கிய குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆண்களில் பலரது விந்தணுக்கள் வீரியமில்லாமல் இருக்கிறது.உயிரணுக்களின் உற்பத்தி அதிகமாக இருந்தால் மட்டுமே குழந்தைப்பேறு சாத்தியமாகும்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றி வரும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேறுதல்,குறைவான விந்து வெளியேறுதல்,விறைப்பை வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க பாலில் முந்திரி,பாதாம் மற்றும் கசகசா சேர்த்து பருகி வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கசகசா – 10 கிராம்
2)முந்திரி பருப்பு – 10
3)நாட்டு பசும்பால் – ஒரு டம்ளர்
4)பாதாம் பருப்பு – 5

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 10 முந்திரி பருப்பு மற்றும் 5 பாதாம் பருப்பை போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு மற்றொரு கிண்ணத்தில் 10 கிராம் கசகசா போட்டு சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சில நிமிடங்களுக்கு ஊற விடவும்.

முந்திரி மற்றும் பாதாம் பருப்பு நன்கு ஊறி வந்ததும் அரைக்க வேண்டும்.பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஊறவைத்த முந்திரி மற்றும் பாலில் ஊறவைத்த கசகசாவை அதில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் நாட்டு பசும் பால் சேர்த்து சில நிமிடங்கள் சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த பேஸ்டை அதில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.