ஆண்கள் அதிகமானோர் நரம்பு தளர்ச்சி பாதிப்பை சந்திக்கின்றனர்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பை உரிய நேரத்தில் குணப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம்:
1.நரம்பு சேதம்
2.நரம்பு பலவீனமடைதல்
3.குடிப்பழக்கம்
4.நரம்புகளில் அடிபடுதல்
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:
*உடல் நடுக்கம்
*நரம்பு வீக்கம்
*நரம்பு வலி
*நரம்பு எரிச்சல்
*உடல் தசை பலவீனம்
*உணர்வின்மை
*இதயத் துடிப்பில் மாற்றம்
*அதீத தலைவலி
*அதிகமாக வியர்த்தல்
நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் அற்புத சித்த வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)கம்பு – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
சிறு தானியங்களில் ஒன்றான கம்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து பயறு வகைகளில் ஒன்றான உளுந்து பருப்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.இவை மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 முதல் 10 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர் காட்டன் துணியில் இதை கொட்டி முளைகட்ட வைக்க வேண்டும்.பிறகு இந்த முளைகட்டிய பொருட்களை கிண்ணத்தில் போட்டு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதை தொடர்ந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.
நரம்பு தளர்ச்சிக்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)ராகி – ஒரு தேக்கரண்டி
2)உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி ராகி ஆதாவது கேழ்வரகு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பு போட்டுக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும்.பிறகு காட்டன் துணியில் கொட்டி இரண்டு நாட்களுக்கு முளைகட்ட வைக்க வேண்டும்.பிறகு பனங்கற்கண்டை பொடித்து அதில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.அதேபோல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முளைகட்ட வைத்து பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் நரம்பு தளர்ச்சி குணமாகும்.பலவீனமான நரம்புகளை பலப்படுத்த இந்த வைத்தியம் நிச்சயம் உதவும்.