உங்களில் சிலருக்கு இரவு நேரத்தில் வெது வெதுப்பான பால் குடிக்கும் பழக்கம் இருக்கும்.இந்த பாலில் சிறிதளவு பேரிச்சம் பழம் போட்டு பருகும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு சரியாகும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பேரிச்சம் பழம் மற்றும் பாலில் கால்சியம்,இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய பேரிச்சம் பழ பால் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.உடல் பலத்தை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
இரத்த சோகை பிரச்சனை சரியாக பேரிச்சம் பழ பால் பருகலாம்.இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்க பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம்.பாலியல் ஆரோக்கியம் மேம்பட இரவு நேரத்தில் சூடான பாலில் பேரிச்சம் பழம் போட்டு சாப்பிட வேண்டும்.மலட்டு தன்மை,விறைப்புக் கோளாறு போன்றவை சரியாக பேரிச்சம் பல பால் சாப்பிடலாம்.
பேரிச்சம் பழ பால் செய்முறை:
தேவையான பொருட்கள்:-
1)பேரிச்சம் பழம் – நான்கு
2)பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
நான்கு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து சுவைக்காக சிறிது தேன் கலந்து பருகலாம்.
அதேபோல் பேரிச்சம் பழம்,பாதாம்,முந்திரி ஆகியவற்றை பாலில் ஊறவைத்து மைய்ய அரைத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.
பால் மற்றும் பருப்பில் உள்ள கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.பேரிச்சம் பழத்தை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடலுறவின் போது சோர்வு ஏற்படுவது கட்டுப்படும்.பேரிச்சம் பால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவும்.