தண்ணீரில் இதை கலந்து பருகினால்.. இந்த ஜென்மத்தில் மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்க மாட்டீங்க!!

Photo of author

By Gayathri

ஆரோக்கியமற்ற உணவுகளால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் ஒரு பொதுவான பாதிப்பு மலச்சிக்கல்.

மலக் கழிவுகள் அதிக நாட்கள் மலக்குடலில் தேங்கி இருந்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)லெமன் – ஒன்று
3)கல் உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.

தண்ணீர் சூடானதும் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறை பிழிந்து விடுங்கள்.

பின்னர் அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து காலை நேரத்தில் பருகினால் மலக்குடலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)கனிந்த வாழைப்பழம் – ஒன்று
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

நன்கு கனிந்த வாழைப்பழம் ஒன்றை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிடுங்கள்.

இதை காலையில் வெறும் வயிற்றில் செய்யலாம்.அல்லது இரவு உறங்குவதற்கு முன்னர் செய்யலாம்.இப்படி செய்தால் பெருங்குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக்கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)காபி தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.பிறகு அதில் அரை தேக்கரண்டி காபி தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.