செல்வமகள் சேமிப்பு திட்டமானது தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது. காலதாமதமாக பணம் செலுத்தினால் அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
இந்த திட்டத்தில் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி விட்டால் அதற்கான வட்டி நாம் செலுத்தக்கூடிய மாதத்தில் வரையறை செய்யப்படும் என்றும் ஒருவேளை 10 ஆம் தேதிக்கு மேல் பணம் செலுத்துகிறோம் என்றால் அதற்கான வட்டி அடுத்த பாதத்தில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கால அளவு மற்றும் வட்டி விகிதம் :-
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரை ஒரு நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டிற்கும் 8.4% பட்டி என கணக்கிடப்படுகிறது. அவ்வாறு ஒரு மாதத்திற்கு 0.7% வட்டியானது செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கலாம் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் மற்றும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால செலவுகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்பொழுது பலரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான செல்வ மகன் சேமிப்பு திட்டம் என அனைத்திலும் தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.