9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

Photo of author

By Divya

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

இன்றைய உலகில் பண தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு சரியாகி விடுவதால்.. பணத்தை சேமிக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர். நாம் பணம் சேமிக்க முக்கிய காரணம் நம் ஆசைகளை நிறைவேற்ற தான்.

வீடு, நிலம், நல்ல வேலை.. என்று பல கனவுகளை சுமக்கும் நமக்கு அதை நிறைவேற்றுவதற்கான வழி என்னவென்று தெரிவதில்லை.

காரியத் தடை நீங்கி எண்ணிய எண்ணங்கள் நிறைவேற.. செய்ய வேண்டிய பரிகாரம்…

வீட்டு பூஜை அறையில் பசுமாட்டு சாணம் சிறிது எடுத்து மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து ஒரு வாழை இலையில் வைக்கவும். பிறகு அதற்கு மஞ்சள்,குங்குமத்தில் பொட்டு வைத்து உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை தெரிவித்து விரைவில் நடக்க அருள்புரிய என்று மனதார வேண்டவும்.

ஒவ்வொரு நாளும் சாணத்தில் புதிதாக பிள்ளையார் பிடித்துக் கொள்ளவும். இவ்வாறு 9 தினங்கள் செய்து வந்தால்… எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.