இன்று மலச்சிக்கல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)நல்லெண்ணெய்
2)விளக்கெண்ணெய்
செய்முறை விளக்கம்:-
சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து தொப்புள் பகுதியில் ஊற்றி தடவ வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு இரவில் தூங்க வேண்டும்.இப்படி செய்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)விளக்கெண்ணெய்
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் முக்கால் பாகம் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் இரண்டு அல்லது மூன்று துளிகள் விளக்கெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த விளக்கெண்ணெய் கலந்த நீரை குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)தண்ணீர்
2)எலுமிச்சை சாறு
3)கல் உப்பு
செய்முறை விளக்கம்:-
ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.