வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

Photo of author

By Divya

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்…

*அகல்
*மஞ்சள், குங்குமம்
*வாழை நார் திரி
*பசு நெய்
*தாமரை தண்டு திரி

இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும்.

அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். அகலின் எந்த இடத்திலும் மஞ்சள் குங்குமம் வைக்கலாம்.

பிறகு சுத்தமான பசு நெய் ஊற்றவும். அடுத்து தீபம் ஏற்ற பஞ்சு திரி பயன்படுத்தக் கூடாது.
பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் வாழை நார் திரி மற்றும் தாமரை தண்டு திரியை ஒன்றாக சுருட்டி அகலில் வைக்க வேண்டும்.

பிறகு தீபம் ஏற்றி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அகல் எரிந்த பின்னர் அதில் உள்ள நெயை மருதாணி குச்சியில் சிறிது எடுத்து உங்களிடம் உள்ள எதாவது ஒரு ரூபாய் தாளில் வைக்கவும்.

இந்த ரூபாய் தாளை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.