நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

Photo of author

By Divya

நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

Divya

கோடை,குளிர்,மழை என்று எந்த பருவ காலத்திலும் சளி தொந்தரவு உங்களைவிட மாட்டேங்குதா.இந்த தீவிர சளி தொந்தரவை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)தேன்

பயன்படுத்தும் முறை:

நான்கு கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தேன் குழைத்து சாப்பிட்டால் சளி கரைந்துவிடும்.மிளகு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சளித் தொந்தரவை சரி செய்யும் அருமருந்தாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)நெய்

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் வாணலி வைத்து கால் தேக்கரண்டி மிளகு போட்டு லேசாக வறுத்தெடுக்க வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த கருமிளகுத் தூளை நெயில் கலந்து சாப்பிட்டால் சளி தொந்தரவு அகலும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)பசும் பால்
2)மிளகுத் தூள்

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி கால் தேக்கரண்டி மிளகுத் தூள் கலந்து குடித்தால் சளி கரைந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)சர்க்கரை
3)தண்ணீர்

பயன்படுத்தும் முறை:

நான்கு மிளகை கொரகொரப்பாக அரைத்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பருகினால் சளி பிரச்சனை குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)சுக்கு
3)மஞ்சள்

பயன்படுத்தும் முறை:

பாத்திரத்தில் கால் தேக்கரண்டி மிளகு.ஒரு துண்டு சுக்கு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வடித்து குடித்தால் சளி பிரச்சனை குணமாகும்.