தலைக்கு வைக்கும் பூவை வாயில் போட்டு சாப்பிட்டாலே நோய்கள் பறந்தோடிவிடும்!!

Photo of author

By Divya

தலைக்கு வைக்கும் பூவை வாயில் போட்டு சாப்பிட்டாலே நோய்கள் பறந்தோடிவிடும்!!

நம் இந்தியாவில் பல வகை பூக்கள் இருக்கிறது.சுப,துக்கம் என்று இரு நிகழ்வுகளிலும் பூக்களின் பயன்பாடு இன்றியமையாதது.பூ என்று சொன்னாலே மணம் வீசுகிறது.சிலவகை பூக்களின் வாசனை மனதை மயக்கும் அளவிற்கு இருக்கும்.பெண்களின் தலையில் பூ இருந்தாலே அவை தனி அழகு தான்.இப்படி பூக்களின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் பூக்கள் சிறந்த மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை.நாம் வாசனைக்காகவும்,அழகிற்காகவும் தலைக்கு வைக்கும் பூக்கள் நம் உடலில் உள்ள நோய்களை குணமாக்கும் ஒரு மருந்து என்பதை அறியாதோர் ஏராளம்.

செம்பருத்தி பூ

இப்பூவின் இதழை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.

சாமந்தி பூ

ஒரு கப் நீரில் ஒரு சாமந்தி பூவின் இதழை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

மல்லிகைப்பூ

மல்லிப்பூவை உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி மல்லிகைப்பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் மூளை நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.புத்தி கூர்மை பெறும்.

ரோஜாப்பூ

தினமும் ஒரு கப் ரோஜா இதழில் தயாரித்த தேநீரை அருந்தி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் வாய்ப்புண்,ஆசனவாய் வீக்கம்,வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் நீங்க ரோஜா இதழை அரைத்து பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சூரியகாந்தி பூ

சூரியகாந்தி பூவை அரைத்து கை,கால்களில் பூசினால் குடைச்சல் ஏற்படாமல் இருக்கும்.சூரியகாந்தி இதழை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி மூக்கு பகுதியில் தடவி வந்தால் சளி பாதிப்பு குணமாகும்.