இந்த காயை குடிக்கும் நீரில் போட்டால்.. பாக்டீரியா கிருமி அழிந்து 100% பியூர் வாட்டர் கிடைக்கும்!!

0
153

தற்பொழுது நீர் மாசு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது.குடிக்கும் நீரில் கழிவு நீர்,பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்து விட்டதால் பல்வேறு டிசீஸ் வரத் தொடங்கிவிட்டது.தண்ணீரில் உள்ள மாசுக்கள் மற்றும் கிருமிகளை அழிக்க சந்தைகளில் பல பிராண்டுகளில் வாட்டர் பியூரிபயர் கிடைக்கிறது.ஆனால் இதை காட்டிலும் இயற்கை முறையை பின்பற்றினால் சுத்தமான தண்ணீர் கிடைக்கும்.

தேற்றான் கொட்டை நீரில் உள்ள மாசுகளை நீக்கும் இயற்கை பியூரிபயராக இருக்கின்றது.நீர்தேக்கி வைத்துள்ள தொட்டியில் படிந்துள்ள கிருமிகள்,மாசுக்கள் கட்டுப்பட தேற்றான் கொட்டையை உடைத்து ஒரு காட்டன் துணியில் மூட்டையாக கட்டி நீருக்குள் போட்டு வைக்கலாம்.

அதேபோல் தினமும் குடிக்க மற்றும் உணவு சமைக்க பயன்படுத்த நீரை தேற்றான் கொட்டையை வைத்து எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:;-

**தேத்தான் கொட்டை காய்
**தண்ணீர்

செய்முறை:-

ஒரு மண் பானையில் தேத்தான் கொட்டை சிறிதளவு போட்டுக் கொள்ள வேண்டும்.தேத்தான் கொட்டை சிறிய உருளைக்கிழங்கு தோற்றத்தில் இருக்கும்.

இதை பானையில் போட்ட பிறகு முக்கால் பாகம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்தால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள்,கிருமிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

இந்த இயற்கை வாட்டர் பியூரிபையர் முறை நம் முன்னோர்கள் காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது செயற்கையான வாட்டர் பியூரிபயரின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் இந்த இயற்கை மெத்தட் அழிவின் விளிம்பில் இருக்கின்றது.

மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவது போன்று செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் அவை தண்ணீரை சுத்தப்படுத்திக் கொடுக்கும்.அதேபோல் தண்ணீரில் சீரகம்,நெல்லிக்காய் போட்டு ஊறவைத்தால் கிருமிகள் அழிந்துவிடும்.பிறகு இந்த நீரை வடிகட்டி பருகலாம்.இவ்விரண்டு பொருட்கள் ஊறவைத்த நீர் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

Previous articleNetflix, OTT தளங்களில் சப்டைட்டிலுடன் படம்!! டப்பிங் படம் இனி வேலைக்காகாது!!
Next articleஉடலுறவிற்கு பிறகு ஆண்குறியில் வலி வீக்கத்தை உணர்கிறீர்களா? இந்த பானம் மட்டும் குடிங்க!!