வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

Photo of author

By Divya

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

கணவன் மனைவி சண்டை காலம் காலமாக உள்ளது. இன்றைய உலகில் குடும்ப ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும்.

கணவன் மனைவி சண்டை தீர எளிய பரிகாரம்….

பச்சை கற்பூரம்…

வாசனை நிறைந்த பொருள்… செல்வதை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்ட இவை மகா லட்சுமிக்கு உகந்த ஒன்று. இந்த பச்சை கற்பூரம் செல்வதை ஈர்ப்பதோடு வீட்டில் மன நிம்மதியை ஏற்படுத்துகிறது. இந்த பச்சை கற்ப்பூரத்தை வைத்து கணவன்-மனைவி சண்டையை கட்டுக்குள் கொண்டு வரும் பரிகாரம் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு முதலில் 30 கிராம் அளவு பச்சை கற்பூரம் எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வெள்ளை காட்டன் துணியை எடுத்து அதில் 30 கிராம் பச்சை கற்பூரத்தை போட்டு முடிச்சி போல் கட்டவும்.

இந்த முடிச்சியை வீட்டின் குபேர மூலையில் யார் கண்ணிற்கும் படாத இடத்தில் வைக்கவும்.

இந்த பச்சை கற்பூர வாசனை வீடு முழுக்க பரவும் பொழுது ஒருவித மன நிம்மதி, குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி பிரச்சனை அனைத்தும் தீரும்.

நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்… சண்டையிடும் உணர்வு ஏற்படாது…

இந்த பச்சை கற்பூரம் கரைந்த பின்னர் மீண்டும் இதேபோல் முடிச்சி போட்டு குபேர மூலையில் வைக்கவும். தொடர்ந்து பின்பற்றி வர அனைத்து பிரச்சனைகளும் தீரும்.