பல் பராமரிப்பின்மை,இனிப்பு உணவுகள் போன்றவற்றால் ஆரோக்கியமான பற்களும் சொத்தையாகிவிடுகிறது.இந்த சொத்தைப்பல் பிரச்சனையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.
பற்களை முறையாக பராமரிப்பவர்களுக்கும் தற்பொழுது பற்சிதைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.சொத்தைப்பல் பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
பல் சொத்தைக்கான காரணங்கள்:
**இனிப்பு பண்டங்கள்
**உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க தவறுதல்
**பற்களை துலக்காமை
பல் சொத்தையை சரி செய்யும் நாட்டு வைத்தியம்:
தீர்வு 01:
நுணா இலை – ஒன்று
முதலில் நுணா என்கின்ற மஞ்சணத்தி இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.
இதை பல் சொத்தை மீது பூசினால் புழுக்கள் மற்றும் கிருமி தொற்றுக்கள் முழுவதும் வெளியேறிவிடும்.
தீர்வு 02:
கொய்யா இலை
புளி
கல் உப்பு
ஒரு கொய்யா இலையில் ஒரு துண்டு புளி மற்றும் சிறிதளவு கல் உப்பு போட்டு மடித்து சொத்தைப் பல் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் புழுக்கள் வெளியேறிவிடும்.தாங்க முடியாத சொத்தைப்பல் வலி இருப்பவர்கள் இந்த ரெமிடியை ட்ரை பண்ணலாம்.
தீர்வு 03:
கிராம்பு
இலவங்கப்பட்டை
தேங்காய் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி கிராம்பு மற்றும் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை பவுடர் பதத்திற்கு அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து சொத்தைப்பல் மீது தடவினால் வலி நீங்கும்.சொத்தைப்பல் புழுக்கள் வெளியேறும்.
தீர்வு 04:
வேப்ப இலை
வேப்பங்குச்சி
வேப்பங்கொழுந்து
இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக காயவைத்துக் கொள்ளவும்.பிறகு
பவுடர் பதத்திற்கு அரைத்து பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.இதுபோன்ற நாட்டு வைத்தியங்களை பின்பற்றி பல் சொத்தை பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.