நெஞ்சு பகுதியில் சளி கோர்த்திருந்தால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.மூச்சு விடுதலில் சிரமம்,சுவாச பாதையில் அடைப்பு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மார்பில் தேங்கிய சளியை பாட்டி வைத்தியம் மூலம் கரைத்து வெளியேற்றிவிடலாம்.அதற்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டு மட்டுமே.வெற்றிலை மற்றும் பச்சை கற்பூரம்.அதேபோல் வெற்றிலை மற்றும் விளக்கெண்ணெய் வைத்தும் நெஞ்சு சளியை கரைக்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
1)பச்சை கற்பூரம் – ஒரு கட்டி
2)வெற்றிலை – ஒன்று
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கட்டி பச்சை கற்பூரத்தை கடையில் இருந்து வாங்கி வாருங்கள்.பிறகு இதை ஒரு கரண்டியில் போட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
இப்படி செய்தால் கற்பூரம் கரைந்து நல்ல ஆவியாகும்.இந்த சமயத்தில் ஒரு முழு வெற்றிலையை கரண்டி மேல் வைத்து சில நிமிடங்கள் சூடாக்கவும்.
பிறகு நெஞ்சு சளி பாதித்தவர்களை படுக்க வைத்து இந்த வெற்றிலையை அவரின் மார்பின் மேல் வைக்கவும்.10 முதல் 15 நிமிடங்களுக்கு வெற்றிலையை வைத்து பிறகு அதை எடுத்துவிடவும்.
இப்படி செய்தால் மார்பில் கோர்த்திருந்த சளி முழுமையாக கரைந்து மலம் மற்றும் நாசி வழியாக வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)வெற்றிலை – ஒன்று
செய்முறை விளக்கம்:
அடுப்பில் தோசைக்கல் ஒன்றை வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு ஒரு வெற்றிலையில் சிறிது விளக்கெண்ணெய் தடவி தோசைக்கல்லில் வைத்து சூடாக்கவும்.
வெற்றிலை நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிடவும்.இந்த வெற்றிலையை படுத்த நிலையில் மார்பின் மீது வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.இப்படி செய்தால் நெஞ்சில் கோர்த்திருக்கும் சளி கரைந்து வெளியில் வந்துவிடும்.