இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

Photo of author

By Divya

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!

வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.

இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய் – 1/4 கப்
2)பெருஞ்சீரகம் – 1/4 கப்
3)பச்சை கற்பூரம் – 1/4 கப்
4)இலவங்கம் – 25
5)மஞ்சள் தூள் – 3 தேக்கரண்டி
6)பட்டை – 3 துண்டு

செய்முறை:-

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். சொல்லப்பட்டுள்ள அளவுபடி வாங்கிக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இவ்வாறு அரைத்தால் வாசனை நிறைந்த விளக்கு பொடி தயாராகி விடும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

வீட்டு பூஜை அறையில் நெய் தீபம், எண்ணெய் தீபம் ;ஏற்றினாலும் இந்த விளக்கு பொடி ஒரு தேக்கரண்டி போட்டு விளக்கேற்றவும்.

பூஜை அறையில் ஒரு மண் விளக்கு அல்லது காமாட்சி விளக்கில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.

பிறகு தயாரித்து வைத்துள்ள விளக்கு பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து தீபம் ஏற்றினால் வீடே நறுமணம் வீசும்.