இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

Photo of author

By Divya

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

வீட்டு பூஜை அறையை சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொண்டால் மட்டுமே தெய்வம் அங்கு குடி இருக்கும்.

பூஜை அறையில் கோயிலில் வீசும் தெய்வீக நறுமணம் வீச வேண்டும் என்றால் அதற்கு பூஜை பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய்
2)பச்சை கற்பூரம்
3)ஜவ்வாது
4)பெருஞ்சீரகம்
5)பட்டை
6)துளசி
7)காய்ந்த மலர்கள்
8)சந்தனம்
9)கஸ்தூரி மஞ்சள்
10)கிராம்பு

மணக்கும் பூஜை பொடி தயாரிக்கும் முறை….

மேல குறிப்பிடப்பட்டுள்ள 10 பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இதை ஈரம் இல்லாமல் காய்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த வாசனை பொடியை ஒரு டப்பாவில் கொட்டி பூஜை அறையில் வைத்து உபயோகிக்கவும்.

பயன்படுத்தும் முறை…

ஒரு சுத்தமான கிண்ணத்தில் தயாரித்து வைத்துள்ள வாசனை பூஜை பொடி தேவையான அளவு கொட்டி பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளவும்.

இதை கடவுள் படங்களுக்கு பொட்டு வைப்பதற்கு… பூஜை அறையில் சுவற்றில் பட்டை போடுவதற்கு… தாங்கள் பொட்டு வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம். இவை வாசனை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதால் இதை பயன்படுத்தும் பொழுது வீடு முழுக்க நறுமணம் வீசும்.