அனைவருக்கும் தர்ம சங்கட சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றவும்.
1)தினமும் உணவு உட்கொண்ட பின் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
2)பிரியாணிக்கு சேர்க்கும் பட்டை துண்டுகளை வைத்து வாய் துர்நாற்றத்தை போக்கும் அருமருந்தை தயாரிக்கலாம்.முதலில் 25 கிராம் பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் எளிதில் கட்டுப்படும்.
3)பத்து முதல் 15 கிராம்பை(இலவங்கம்) மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பல் துலக்கிய பிறகு,உணவு உட்கொண்ட பின்னர்,இரவு தூங்குவதற்கு முன்,வெளியில் செல்லும் போது இந்த கிராம்பு பொடியை உட்கொண்டால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
அதேபோல் கிராம்பு ஊறவைத்த நீரை தினமும் பருகி வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.
4)பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.குழந்தைகள் பெருஞ்சீரகம் சாப்பிட மாட்டார்கள்.அவர்களுக்கு பெருஞ்சீரகத்துடன் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.
5)பன்னீர் ரோஜா இதழை காயவைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.