ஆண்,பெண் அனைவருக்கும் குறட்டை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குறட்டை விடுபவர்களுக்கு மட்டும் அல்ல அருகில் இருப்பவர்களுக்கும் இந்த குறட்டையால் தூக்கம் பறிபோகிறது.தூக்கத்தில் சுவாசிக்கும் போது தொண்டையில் காற்று பாய்வதால் குறட்டை உண்டாகிறது.இதனால் தொண்டையில் இருக்கின்ற தளர்வான திசுக்கள் அதிர்வடைந்து அதிக சத்தத்தை எழுப்புகிறது.இதனால் தான் குறட்டை சத்தம் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது.
குறட்டை சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் குறட்டை தீவிர நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.சிலருக்கு குறட்டை போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே குறட்டையை சாதாரணமாக நினைத்துவிட வேண்டும்.
குறட்டை யாருக்கு உண்டாகும்?
1)உடல் பருமன்
2)மது அருந்தபவர்கள்
3)தொண்டை பிரச்சனை இருப்பவர்கள்
4)சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள்
5)மல்லாந்து தூங்குபவர்கள்
குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட வழிகள்
1.பூண்டு
2.தேன்
இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை தேனில் ஊறவைத்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் குறட்டை பிரச்சனை நீங்கும்.
1.ஏலக்காய்
2.தண்ணீர்
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு ஏலக்காயை இடித்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் குறட்டை பிரச்சனை சரியாக்க.
1.ஆலிவ் எண்ணெய்
2.தேன்
ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் குறட்டை பிரச்சனை சரியாகும்.
1.பசு நெய்
ஒரு ஸ்பூன் பசு நெய்யை சூடாக்கி ஆறவிட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் மூக்கு பகுதியில் சில சொட்டுகள் விட்டு படுத்தால் குறட்டை ஏற்படாமல் இருக்கும்.
1.நல்லெண்ணெய்
2.கருப்பு மிளகு
25 மில்லி நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி இரண்டு அல்லது மூன்று கரு மிளகை இடித்து அதில் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு மூக்கு ஓட்டையில் விட்டு படுத்தால் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.